ஞாயிறு, 29 டிசம்பர், 2013

வால் எலும்பு வலி

உள்ளே நுழைந்த அந்த இளம் மாண­வி யின் முகத்தில் இனம் புரி­யாத தயக்கம். “இருங்­கோவன்” கதி­ரையை அவளை நோக்கி நகர்த்­தினேன். உட்­கா­ர­வில்லை.

“இருக்­கிறாள் இல்லை வலிக்­குதாம்” என இடை­ம­றித்தாள் அம்மா.



“எங்க வலி” என்று கேட்­டதும் அந்தச் சின்னத் தேவதை வெட்­கப்­பட்டாள்.மேலும் பல கேள்­விகள் கேட்­டதும் அது வால் எலும்பு வலி என்­பது எனக்குப் புரிந்­தது. அவள் வெட்­கப்­ப­டு­வதில் நியாயம் இருக்­கி­ற­துதான்.

தேவ­தைக்கு வாலா என அதி­ச­யிக்­கா­தீர்கள். உங்­க­ளுக்கும் எனக்கும் உள்­ளது அவ­ளுக்கு மட்டும் இல்­லாது போகுமா?

மனிதன் உட்­பட மிரு­கங்­க­ளுக்கும் முள்­ளந்­தண்டு (முது­கெ­லும்பு) இருக்­கி­றது. இது ஒரு எலும்பு அல்ல. பல தனித்­தனி எலும்­பு­களின் சேர்க்­கை­களால் ஆனது என்­பது உங்­க­ளுக்குத் தெரியும் கழுத்தில் ஆரம்­பித்து முதுகு வழி தொடர்ந்து இடுப்புப் பகு­தி­யையும் கடந்து இறு­தியில் முடி­வது இந்த வால் எலும்­பு­க­ளில்தான். இவ் எலும்பை ஆங்­கி­லத்தில் coccyx என்­பார்கள். தமிழில் குத எலும்பு, வால் எலும்பு, உள்வால் எலும்பு என்று எப்­படி வேண்­டு­மா­னாலும் சொல்­லலாம்.

இவை பொது­வாக எந்த ஈடாட்­டமும் இன்றி செய­லற்று வாழா­தி­ருப்­பவை. எனவே இவற்றில் நோய் ஏற்­ப­டு­வது குறைவு. ஆயினும் சில தரு­ணங்­களில் நோய் ஏற்­ப­டவே செய்யும்.

அந்தக் குத எலும்­பில்தான் இவ­ளுக்கு வலி. படுக்­கையில் கிடத்தி, பிட்டப் (குண்டி) பகுதி தசை மடிப்­பு­களை விரித்து, மல­வா­யி­லுக்கு சற்று மேலே உள்ள குத எலும்பின் நுனிப் பகு­தியைத் தொட்­ட­போது கடும் வலி இருப்­பது புரிந்­தது. அக்கம் பக்கம் உள்ள சரு­மத்­திலோ சதைப் பகு­தி­க­ளிலோ வீக்கம் வலி வெப்பம் எது­வுமே இல்லை என்­பதை நிச்­ச­யப்­ப­டுத்தி வேறு நோய் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடிந்­தது.

குத எலும்பு அழற்சி

இவ்­வாறு குத எலும்பில் வலி ஏற்­ப­டு­வதை குத எலும்பு அழற்சி (Coccydynia) எனலாம். ஆயினும் அதன் அருகில் உள்ள ஏனைய பகு­தி­க­ளிலும் இது­போன்ற வேறு வலிகள் ஏற்­ப­டலாம் என்­பதால் கவனம் எடுக்க வேண்டும். உதா­ர­ண­மாக மல­வாயில் கட்­டிகள், மூலக் கட்­டிகள், இடுப்பு எலும்பு வலிகள், தசைப் பிடிப்­புகள் போன்­ற­வையும் அவ்­வி­டத்தில் வலியைத் தோற்­று­விப்­ப ­துண்டு.

இந்த வலி­யா­னது, கடு­மை­யா­னது அல்ல என்­ற­போதும் ‘அம்மல்’ வலி­யாகத் தொட ரும். அவ்­வி­டத்தை அழுத்தும் போது மிகக் கடு­மை­யாக இருக்கும். திடீ­ரெனக் குண்டி அடி­பட உட்­கார்ந்­தாலோ, துவிச்­சக்­கர வண்டி போன்ற அழுத்தும் இருக்­கை­க­ளிலும், முச்­சக்­கர வண்டி போன்ற குலுக்கும் வாக­னங்­க­ளிலும் பயணம் செய்­தாலோ மோச­மாகும்.

இந்நோய் ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­பதைத் தெளி­வாகச் சொல்­வது சிரமம். பொது­வாக அடி­பட உட்­காரல், விழுதல், பின்­பு­ற­மாக சுவ­ரோடு மோதுதல் போன்­றவை கார­ண­மாக இருக்­கலாம்.

இதைக் கண்­ட­றி­யவோ நோயை உறு­திப்­ப­டுத்­தவோ பரி­சோ­த­னைகள் எதுவும் அவ­சி­ய­மில்லை. நோயாளி சொல்­வதைக் கேட்டு மருத்­துவர் பரி­சோ­தித்துப் பார்ப்­பதன் மூலம் நோயை நிர்­ணயம் செய்ய முடியும். அருகில் உள்ள தசைப் பகு­தி­க­ளிலோ எலும்­பு­க­ளிலோ பிரச்­சினை இருக்­கலாம் எனச் சந்­தே­கித்தால் மட்டும் CAT Scan, MRI போன்ற பரி­சோ­த­னைகள் அவ­சி­ய­மாகும்.

இந்த வலி வந்­த­வுடன் மருத்­து­வரை நாடி ஓட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அடிப்­ப­குதி அண்­டா­த­வாறு குஷன் அல்­லது துணிகள் வைத்து மென்­மை­யாக்­கப்­பட்ட இருக்­கை­க­ளி­லேயே உட்­கார வேண்டும்.

நீண்­ட­நேரம் தொடர்ந்து உட்­கா­ரு­வ­தை யும் தவிர்க்க வேண்டும்.

மருத்­துவம்

பர­சிட்­டமோல் அல்­லது வீரியம் கூடிய வலி நிவா­ர­ணிகள் வலியைத் தணிக்க உத வும்.

ஆயினும் நரம்­பு­களை அமை­திப்­ப­டுத்தும் மருந்­துகள் கூடு­த­லாகப் பலன் தரலாம்.

ஸ்டீரொயிட் ஊசி மருந்தை அவ்­வி­டத்தில் ஏற்­று­வது ஆச்­ச­ரி­ய­க­ர­மான முறையில் வலி யைத் தணிக்கும். வலியைத் தணிப்­பது மட்­டு­மின்றி நோயி­லி­ருந்து பூரண விடு­த­லையைப் பெரும்­பாலும் கொடுக்கும். அனு­ப­வ­முள்ள மருத்­து­வர்கள் இதைத் தங்கள் மருத்­துவ ஆலோ­சனை அறையில் வைத்தே போடக் கூடி­ய­தாக இருக்கும்.

சில வகை மசாச் முறை­களும் பயிற்­சி­க ளும் உத­வலாம்.

வலி கடு­மை­யா­கவும் தொடர்ந்து தொல்லை கொடுப்­ப­தா­கவும், ஏனைய சிகிச்­சை­க­ளுக்கு தணி­வ­தாகவும் இல்லை எனில் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­ப­டலாம். Coccygectomy எனப்­படும். இந்தச் சிகிச்­சையில் அந்த குத எலும்பை அகற்­று­வார்கள். ஆயினும் அதற்­கான தேவை பெரும்­பாலும் ஏற்­ப­டு­வ­தில்லை.

நீங்கள் செய்யக் கூடி­யவை

சுடு ஒத்­தடம் கொடுப்­பது, ஐஸ் வைப்­பது போன்­றவை உதவக் கூடும். ஆயினும் அந்த இடத்தில் இவற்றைச் செய்­வது மிகுந்த இடைஞ்­ச­லா­னது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

வலி உள்ள இடம் மீண்டும் தாக்­குப்­ப­டா­த­வாறு கவ­ன­மாக இருக்க வேண்டும். அதே­போல அவ்­வி­டத்­திற்கு ஆறுதல் கொடுப்­பது அவ­சியம்.

ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­து­போல மெது­மை­யான இருக்­கை­களில் உட்­கார வேண்டும். மெத்தை, தலை­யணை, குஷன் போன்­ற­வற்றை இருக்­கையில் வைத்து அதன் மேல் உட்­கார வேண்டும். உட்­கா­ரும்­போதும் திடீ­ரென அடி­பட உட்­கா­ராது, மெது­வாக கைபி­டி­களைப் பிடித்து பாரம் அடியில் தாக்­கா­த­வாறு மென்­மை­யாக உட்­கார வேண்டும்.

நடுப்­ப­கு­தியில் குழி வைத்து அப்­ப­குதி அண்­டா­த­வாறு உட்­காரக் கூடிய கார் டியூப் போன்ற இருக்­கைகள் கிடைக்­கின்­றன. முத லில் கூறிய அந்தக் குட்டித் தேவதை அத்­த­கைய ஒரு இருக்­கையைப் பயன்­ப­டுத்தி கொழும்­பி­லி­ருந்து கதிர்­காமம் வரை நலமே சுற்றுப் பிர­யாணம் செய்ய முடிந்­தி­ருந்­தது.

எலும்பு உள்ள இடத்தில் அண்­டா­த­வாறு பள்ளம் விடப்­பட்ட குஷன்கள் (Coccyx (tail bone cushions) விற்­ப­னைக்கு கிடைக்­கி­ற­தாக அறி­கிறேன். இலங்­கையில் இருப்­பதை நான் அறி­ய­வில்லை.

இடுப்பு எலும்புப் பகு­தியில் உள்ள தசை களைத் தளரச் செய்யும் பயிற்சிகள் (pelvic floor relaxation) கொடுப்பது உதவும். ஆழ மாக மூச்சு எடுத்து மலவாயில் சலவாயில் ஆகியவற்றை அண்டியுள்ள தசைகளை தள ரச் செய்வது இதுவாகும். பொதுவாக சிறு நீர் கழியும் போது இவ்வாறு தசைகள் தளர் வதுண்டு.

பொதுவாக மனதை அலட்டிக் கொள்ளாது மேற்கூறிய வாழ்க்கை முறைகளையும் பயிற்சிகளையும் செய்ய நோய் குணமாகும். இப்பெண்ணிற்கு அவற்றால் வலி தணியாததால் ஊசி ஏற்றிக் குணமாக்க வேண்டியதாயிற்று.

  டாக்டர்.எம்.கே.முருகானந்தன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல